யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!
Share

குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். Jaffna Ava Hang Police Operation Sri Lanka Tamil News
இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், 300 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றும், 200 காவல்துறையினரும், முல்லைத்தீவில் இருந்து அழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும், கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்கள் தவிர புலனாய்வுப் பிரிவினரும் தேடுதல்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, நேற்றுக்காலை 6 மணி தொடக்கம், 11 மணி வரை வாகனங்கள், குறிப்பாக, உந்துருளிகள் சோதனையிடப்பட்டு, 81 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குழு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
மேலும் நேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, ஆவா குழுவினரின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட, 21 வீடுகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டன. இதன் போது ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!
கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!
சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!
மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews