புதுச்சேரியில் விபசாரம் நடத்திய 8 பேர் கைது; பெண்கள் மீட்பு!

0
457
8 people arrested Puducherry Women Recovery india tamil news

புதுச்சேரியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் ஓட்டல், வீடு, ஸ்பாவில் விபச்சாரம் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.8 people arrested Puducherry Women Recovery india tamil news

ரெட்டியார்பாளையம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம், புதுச்சேரி விழுப்புரம் சாலை, ஜெயா நகர் மார்க்கெட் கட்டிடம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில்,திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தும் மூலக்குளம் பாலா (எ) பாலசுப்ரமணியன், 45; முதலியார்பேட்டை விடுதலை நகரைச் சேர்ந்த மேலாளர் தேவ் (எ) தேவ்னாந்த், 24; புரோக்கர் பாண்டியன், ரூம் பாய் குமராட்சியைச் சேர்ந்த ராஜ்குமார், 47; கீழ்புத்துப்பட்டு அண்ணாச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன், 46; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட கரூரை சேர்ந்த இளம்பெண், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதே போல், ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் 6வது குறுக்கு தெரு, வாய்க்கால் வீதி பின்புறம் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு, விபசாரத்தில் ஈடுபட்ட கொல்கத்தாவை சேர்ந்த இளம் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

புரோக்கர்கள் முதலியார்பேட்டை திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (எ) ராஜேந்திரன், 37; நெய்வேலி வடக்குத்து பகுதியைச் சேர்ந்த விஜயன், 31; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை மடுவுபேட் சந்திப்பு அருகே உள்ள பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது.இதை தொடர்ந்து புரோக்கர் நோணாங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முருகதாஸ், 40; சண்முகாபுரம் வி.பி. சிங் நகரைச் சேர்ந்த சந்தோஷ், 32. ஆகியோரை கைது செய்து, மசாஜ் சென்டரில் இருந்த 6 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சிறப்பு அதிரடி போலீசாரின் சோதனையில், 8 பெண்கள் மீட்கப்பட்டு, 8 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசுவாச போலீஸ் விபச்சார வழக்கில் லாஸ்பேட்டையில் கைதானவர்கள் மட்டும் பத்திரிகையாளர்கள் முன்பு காண்பிக்கப்பட்டனர்.

ரெட்டியார்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்ட தனியார் ரெசிடன்சி மேலாளர், உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை ரெட்டியார்பாளையம் போலீசார் பத்திரிகையாளர்களிடம் இருந்து மறைத்து வேனில் அவசர அவசரமாக அழைத்து சென்றனர்.

புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களிடம், அவர்களும் மனிதர்கள் தான், ஏன் படம் எடுக்கிறீர்கள் என கடிந்து கொண்ட விசுவாச போலீசார் வேனை வேகமாக எடுத்து சென்றனர்.

விபசார புரோக்கர்களுக்கு விசுவாசமாக இருக்கும் மாமூலான ரெட்டியார்பாளையம் போலீசார், புரோக்கர்களை கைது செய்யாமல் இருந்திருக்கலாம்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :