சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி

0
603
Six employees killed blast Bhilai Steel

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்திலுள்ள அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் இன்று இடம்பெற்ற வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். (Six employees killed blast Bhilai Steel)

துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருவதுடன், இந்திய புகையிரத சேவைக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது.

இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகின்றது.

அந்த மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் பிலாய் என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

இந்த நிலையில், இந்த ஆலையில் இன்று வழக்கம் போன்று பணிகள் நடைபெற்ற போது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Six employees killed blast Bhilai Steel