நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது

0
526
nakkheeran gopal applied bail chennai egmore court

பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்றும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி இரத்து செய்துள்ளார். (nakkheeran gopal applied bail chennai egmore court)

சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பிணை மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை இடம்பெற்றது.

நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார். நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.

124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை எச்சரிக்கும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை. ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் தான் 124 போட முடியும்.

ஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா. கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம்.

ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும் என்று கோபால் தரப்பு வாதிட்டது.

இதனையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார்.

இதற்கு பொலிஸ் தரப்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; nakkheeran gopal applied bail chennai egmore court