நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்

0
591
Nakheeran denied permission meet gopal Sitting

பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வீதியில் அமர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். (Nakheeran denied permission meet gopal Sitting)

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் புனே செல்லவிருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஜாம்பஜார் பொலிஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயற்படுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சிந்தாதிரிபேட்டை பொலிஸ் நிலையத்தில் நக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வீதியில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.

இதன்போது, வைகோ கூறியதாவது, நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை எச்சரிக்கும் செயல். ஒரு வழக்கறிஞராக நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன்.

சட்டவிதிகளின் படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன். நக்கீரன் கோபாலை சந்திக்க பொலிஸார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Nakheeran denied permission meet gopal Sitting