மனு சிலை மீது கறுப்புப் பெயிண்ட்; தலித் பெண்கள் மீது வழக்கு!

0
502
Black paint petition - against Dalit women india tamil news

இந்திய சமூகத்தில் தீண்டாமையும், சாதியக் கொடுமையும் புரையோடிப் போயிருப்பதற்கு காரணமாக கருதப்படுபவர் மனு.Black paint petition – against Dalit women india tamil news

அவர் எழுதிய மனு சாஸ்திரம்தான், பிறப்பின் அடிப்படையில், மனித சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்து அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது.

அதிலும், பெண்கள் அடிமையினும் அடிமையாக வரையறுத்தது.

ஆனால், இந்தியாவில் அவருக்கும் சிலைகள் இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் அவுரங்கபாத் நகரிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலையும் அவற்றில் ஒன்றாகும்.

இந்நிலையில்தான், அவுரங்காபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மனு சிலை மீது, பெண்கள் கறுப்புப் பெயிண்ட்டை ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

ஷீலா பாய் மற்றும் காந்த ரமேஷ் ஆயரி ஆகிய அந்த இரு பெண்களும் தலித்துக்கள் ஆவர். இவர்களை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

தங்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்பாக பேட்டி அளித்துள்ள தலித் பெண்கள் இருவரும், “பெண்களை இழிவுபடுத்தி மனுஸ்மிருதி எழுதிய மனுவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகவே கறுப்பு பெயிண்டை வீசினோம்” என்று தெரிவித்துள்ளனர்.0

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வளாகத்தில், மனு சிலை வைப்பதற்கு 28 ஆண்டுகளுக்கு முன்பே தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றமும் சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது.

ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஆச்சரிய தர்மேந்திரா சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை உத்தரவை வாங்கியிருந்தார்.

இதனால் மனுவின் சிலை, நீதிமன்ற வளாகத்திலிருந்து அகற்றப்படவில்லை. அந்தச் சிலை மீதே தற்போது கறுப்பு வண்ண பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :