சவுதியிலுள்ள சர்வதேச இந்திய பாடசாலையை மூட வேண்டாம்; சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை

0
516
Indian school Saudi told vacate premises students

சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பாடசாலையை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். (Indian school Saudi told vacate premises students)

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சர்வதேச இந்திய பாடசாலை (ஐ.ஐ.எஸ்.ஜெ.) இயங்கி வருகின்றது.

ஐ.ஐ.எஸ்.ஜெ பாடசாலையின் பிரதான கட்டிடத்தில் பெண்கள் பிரிவு இயங்கி வருவதுடன், அங்கிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் ஆண்கள் பிரிவு உள்ளது.

இங்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகின்றது. தற்போது, கட்டடம் குறித்த வழக்கில், சவுதி நீதிமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதிகள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் ‘தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்’ என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக இணையத்தளத்தின் மூலம் 3300 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Indian school Saudi told vacate premises students