எதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது! – அருண் ஜெட்லி!

0
430
opposition interested making twitter - arun jaitley india tamil news

எதிர்கட்சிகள் ட்வீட் போடுவதிலும், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதிலுமே ஆர்வம் காட்டி வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.opposition interested making twitter – arun jaitley india tamil news

“பெட்ரோல் டீசல் விலையும், எதிர்க்கட்சிகளின் கபட நாடகமும்” என்ற தலைப்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தனது முகப்பக்கத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இக்கட்டுரையில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் வரம்பு நிர்ணயித்துள்ளதால், விநியோகத்திற்கும் உற்பத்திக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நிலவும் அரசியல் நெருக்கடியு, எண்ணெய் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சூழலால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்றது. பெட்ரோல் விலை உயர்வு என்பது ஏற்கமுடியாது ஒன்று என்றபோதிலும் மறுக்க முடியாத ஒன்று.

எனினும், மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில் தலா 2.5 ரூபாய் குறைத்துள்ளது.

இதேபோல் மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமே, விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மற்ற மாநிலங்கள் வருவாயை பெரிதாக கருதி, விலைக்குறைப்பு மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்கட்சிகள் ட்வீட் போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதிலுமே ஆர்வம் காட்டி வருகிறது.

பெட்ரோல் விலை குறைப்பிற்கு மத்திய அரசின் சார்ப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் எதிர்கட்சிகள் மத்திய அரசின் நடவடிக்கைகளை குறைகூறுவதையே கடமையாக கொண்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :