தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – முதல் 10 இடங்கள்!

0
551

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் சிங்கள மொழி மூலம் இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

பிலியந்தளை சோமவீர சந்திரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்னுல் வித்தானகே மற்றும் வெயாங்கொடை புனித மேரிஸ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த குருகுலசூரிய சனுப்ப திமத் பெரேரா ஆகிய மாணவர்களே இவ்வாறு தேசிய மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

தேசிய ரீதியில் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை 10 தமிழ் மொழி மூல மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் தேசிய ரீதியான முதலாம் இடத்தை யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழொளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவஸ்கன் நதி ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பெற்றுள்ள புள்ளிகள் 198 ஆகும்.

வவுனியா நெலுக்குளம் சிவபுரம் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த பாலகுமார் ஹரித்திக் ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியாக தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ் மொழி மூலத்தில் 196 புள்ளிகளை 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நேஷிகா சேம்தினேஷ், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சுஹா சகீர் மொஹமட், அக்கரைப்பற்று சாஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த தஸ்லீம் ஷல்ஜி அஹமட், உன்னிச்சை 06 ஆம் மைல் கல் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெயராஜ் துஹின் டரேஷ், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கனகலிங்கம் தெனூஷன், யாழ், திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கிருஜனா, தெல்லிப்பளை மஹாஜனா கல்லூரியைச் சேர்ந்த சாருக்கா சிவனேஸ்வரன் ஆகிய ஏழு மாணவர்களும் 196 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

Tamil News Live

Tamil News Group websites