ரெட் அலர்ட்! – என்ன செய்ய போகிறது மாநகராட்சி?

0
569
red alert - going tamilnadu corporation india tamil news

சென்னைக்கு, மிக கன மழையான, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், வெள்ள பாதிப்புக்களை தவிர்க்க, மாநகராட்சி என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.red alert – going tamilnadu corporation india tamil news

தமிழகத்தில், மேலடுக்கு சுழற்சி காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 7ம் தேதி, மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த, 2015 கனமழையின் போது, நகரம் முழுவதும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

நடப்பாண்டில், வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக, சென்னையில், இணைப்பு இல்லாத மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால் என, 370 பகுதிகள் கண்டறியப்பட்டு, 290 கோடி ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், மழைநீர் வடிகாலை துார் வாரும் பணிகள் மற்றும் பழுது நீக்கும் பணிகள், 38.23 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், சென்னைக்கு, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால், பெரும்பாலான சாலைகளில், நீர் தேங்கி உள்ளது.இதனால், 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, மீண்டும் ஏற்படுமா, இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, சென்னை மாநகராட்சி என்ன செய்ய போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து, மாநகராட்சி துணை கமிஷனர், கோவிந்த ராவ் கூறியதாவது :

சென்னையில், மழைநீர் வடிகால் துார் வாரும் பணிகள், 60 சதவீதம் முடிந்துள்ளன. இரண்டு நாட்களில், அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கும் இடங்களில், உடனடியாக நீரை அகற்ற, 578 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

வெள்ள பாதிப்பில் இருந்து, மக்களை மீட்பதற்காக, தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள், 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 52 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி கண்காணிக்கப்படுவதுடன், பேரிடர் மேலாண்மை வீரர்களும், உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 176 நிவாரண முகாம்களில், பொதுமக்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :