கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா? விக்கிக்கு வந்த சந்தேகம்!

0
457

அமெரிக்காவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பதில் தூதுவர் ரொபேட் ஹில்டன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்தார். North Province CM Vigneswaran Sri Lanka Tamil News

இச்சந்திப்பு யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் , வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில், சம்பந்தரின் மௌனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு விக்கினேஸ்வரன் பதிலளித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியில் யார் தீர்மானங்கள் எடுப்பவராக இருக்கின்றாரோ அவரின் தீர்மானங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.

தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால், நன்மைகள் ஏற்படுமென்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதனிடையே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நேரத்தில் தலைவர் சம்பந்தன் தானே உங்களுக்கு ஆதரவாக இருந்தார் என மீண்டும் ஊடகவியலாளார்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது பொது மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், நடவடிக்கை எடுத்தார் என்று சுட்டிக் காட்டினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites