சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் பொலிஸார் நியமனம்

0
529
Kerala govt deploy 500 women cops Sabarimala

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் பொலிஸாரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. (Kerala govt deploy 500 women cops Sabarimala)

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனாலும் கேரள அரசும் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்த உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதுதொடர்பாக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு அதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது சபரிமலை கோவில் நடைசாத்தப்பட்டுள்ளதுடன், ஐப்பசி மாத பூஜைக்காக எதிர்வரும் 17 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. மறுநாள் 18 ஆம் திகதி முதல் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யவுள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக அமுலுக்கு வந்ததால் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல இனி எந்த தடையும் இல்லை என்றும் அவர்கள் ஐப்பசி மாத பூஜையிலும் கலந்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, சபரிமலையில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் அதுதொடர்பான நடவடிக்கைகளும் மாநில அரசு, தேவசம் போர்ட் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

சபரிமலைக்கு வருகின்ற பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக அதிகளவு பெண் பொலிஸாரை பம்பை, சன்னிதானத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் நடை திறப்புக்கு 2 நாட்கள் முன்னதாக எதிர்வரும் 15 ஆம் திகதி பெண் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் பொலிஸாரை நியமிக்க திட்டமிட்டுள்ளதுடன், அவர்களில் 350 பேர் கேரளாவில் இருந்து பணி அமர்த்தப்படுவார்கள் என்;றும் ஏனையவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இந்தக் கடிதத்தில் 5 மாநிலங்களில் இருந்து பெண் பொலிஸாரை சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Kerala govt deploy 500 women cops Sabarimala