எஸ்-400 ரக ஏவுகணையை வாங்க இந்தியா கையெழுத்து

0
563
India Signs Russia S400 Missile System Amid

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி எஸ்-400 ரக ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா கையெழுத்திட்டுள்ளது. (India Signs Russia S400 Missile System Amid)

இந்தியாவின் நீண்டகால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷ்யாவுக்கு சிறப்பிடம் உள்ளதாகவும் இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு நடந்து வருகின்றது.

அந்த வரிசையில் 19 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் இன்றைய தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றைய தினம் டெல்லி வந்தடைந்தார்.

உயர் மட்டக்குழுவினருடன் இந்தியா வந்துள்ள புடின், இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.

அதேபோன்று, ஈரானில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்தும், மோடியும், புடினும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

5 பில்லியன் டொலர் (சுமார் ரூ.36 ஆயிரம் கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கைய மீறி கையெழுத்தாகியுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தானதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரிகின்றது. தற்போது இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; India Signs Russia S400 Missile System Amid