தினமும் விபத்துக்களால் 8 பேர் உயிரிழப்பு! தினமும் 105 வாகன விபத்துக்கள்!

0
533

இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Daily 8 Person Dead Accident Sri Lanka Tamil News

நாளாந்தம் பதிவாகும் 100 முதல் 105 வரையிலான விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாவதாகவும் மேலும் 20 பேர் வரையில் நாளாந்தம் விபத்துக்களால் காயமடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் நேற்று அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இவ்விபத்துக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

தண்டப்பணம் அறவிடும் முறைமையை இலத்திரணியல் முறையில் செயற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடனட்டைகள், தொலைபேசிகள் ஊடாக தண்டப்பணம் அறவிடும் வகையில் இந் நடவடிக்கையினை நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதேபோன்று சி.சி.ரி.விகள் ஊடாக அவதானித்து போக்குவரத்து குற்றங்களை முன்னெடுப்போர் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பது குறித்தும், போக்கு வரத்து குற்றங்களில் ஈடுபடுவோரின் சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளி முறையில் செயற்படுவது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites