கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்தும் முதலிடம்

0
634
Forbes Mukesh Ambani emerges richest Indian 11th

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்தும் 11 ஆவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். (Forbes Mukesh Ambani emerges richest Indian 11th)

பிரபல போர்பஸ் பத்திரிக்கை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவித்து வருகின்றது.

இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டொலர்கள் என்றும் இந்த வருடம் மாத்திரம் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டொலர்கள் அதிகரித்திருக்கின்றது.

விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளனர்.

100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மாத்திரம் இந்த ஆண்டில் இடம் பெற்றுள்ளனர்.
பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா இப்பட்டியலில் 39 ஆம் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Forbes Mukesh Ambani emerges richest Indian 11th