முன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்!

0
379
cow express - forgotten human bjp chief minister india tamil news

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.cow express – forgotten human bjp chief minister india tamil news

இதையொட்டி பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிளும் தற்போதே தேர்தல் வேலைகளைத் துவங்கி, பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

எனினும், ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்று இரண்டு கட்சிகளுமே பிரச்சாரத்தில் எதுவும் சொல்வதாக இல்லை. மாறாக, பசு மாடுகளுக்கு என்ன செய்வோம் என்பதில்தான் போட்டிபோட்டு வருகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் கட்சியினர் திடீரென கோவில்களுக்கு செல்வதும், பசு மாடுகளைக் கவுரவிப்பதுமாக இருக்கின்றனர்.

வழக்கமாக இதனை பாஜக-தான் செய்யும். ஆனால், திடீரென தங்களின் வேலைத் திட்டத்தை காங்கிரஸ் காப்பி அடித்தது, பாஜக-வை கலக்கத்தில் தள்ளியது.

cow express - forgotten human bjp chief minister india tamil news

பசு பாதுகாப்பு வாரியம் ஏற்கெனவே அமைக்கப்பட்டாலும், காங்கிரசுக்கு பதிலடியாக, புதிதாக ‘பசு சரணாலயம்’ ஒன்று ஏற்படுத்தப்படும் என பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். காங்கிரசும் விடுவதாக இல்லை.

ஓரிடத்தில்தானே நீங்கள் சரணாலயம் அமைப்பீர்கள்; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு ஊராட்சியிலும் ‘பசு பாதுகாப்பகம்’ அமைப்போம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்நாத் அறிவித்தார்.

இம்முறை சிவராஜ் சிங் சவுகானுடையது என்பதால், கமல்நாத்துக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்று யோசித்துப் பார்த்த அவர், “காயமடையும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ‘பசு எக்ஸ்பிரஸ்’ என்ற மருத்துவ சேவையை மாநில அரசு தொடங்கும்” என்று தற்போது அறிவித்துள்ளார்.

இந்த ‘பசு எக்ஸ்பிரஸ்’ வாகனத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :