ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு

0
235
புடினின் கோரிக்கை முற்றாக நிராகரித்த ஜி 7 நாடுகள்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். (5 Billion Missile System Deal Russia President vladimir putin)

இரு நாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய – ரஷ்ய வருடாந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, 19 ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

புடினின் இந்தப் பயணத்தின் போது ரஷ்யாவிடம் இருந்து எஸ். 400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு 36,792 கோடி ரூபாய் என்றும் இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், இது ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை என்றும் இதனை வாங்க சீனா கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதவிர, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கியமாக, ரஷ்யாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்; ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் விதமாக புடினின் இந்தப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை புடின் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இந்திய ரஷ்ய தொழிலதிபர்கள் கூட்டத்திலும் புடின் பங்கேற்கவுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; 5 Billion Missile System Deal Russia President vladimir putin