தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

0
481
Cyclone likely Arabian Sea soon heavy rain tamilnadu

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Cyclone likely Arabian Sea soon heavy rain tamilnadu)

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகிய தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வரலாறு காணாத அளவுக்கு பெய்ததைத் தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்துவரும் பருவமழை வட மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால், அரபிக் கடலையொட்டியுள்ள கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதும் முடிவுக்கு வருகின்றது.

இதன்பின்னர் 6 ஆம் திகதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் அடுத்த 48 மணிநேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் சென்றுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 5 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் 6 ஆம் திகதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும் புதுவையிலும், கேரளாவிலும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பின்னர் கன மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கின்றது.

இதேபோன்று தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, குமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 7 சென்றி மீற்றர் மழை பெய்துள்ளது.

குடவாசல், திருவாரூர், குழித்துறையில் 5 சென்றி மீற்றர், திருமனூர், நாகர்கோவில், விளாத்திகுளம், கோவில் பட்டியில் 4 சென்றி மீற்றர் மழையும் பெய்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Cyclone likely Arabian Sea soon heavy rain tamilnadu