விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்

0
366
UP Delhi border farmers stopped Kisan Kranti Padyatra

வடமாநில விவசாயிகள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி முன்னெடுத்துள்ளதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (UP Delhi border farmers stopped Kisan Kranti Padyatra)

உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்.

இன்றைய தினம் கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி ஒட்டுமொத்தமாக பேரணி சென்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் – டெல்லி எல்லையில் அதிரப்படையினர் விவசாயிகளை டெல்லிக்குள் உட்புகாத வண்ணம் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர்.

இதன்போது விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றதுடன், விவசாயிகள் கலைந்து செல்வதற்காக பொலிஸார் தண்ணீர் அடித்தும், கண்ணீர் புகை குண்டும் வீசியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; UP Delhi border farmers stopped Kisan Kranti Padyatra