வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

0
388
Home Minister Rajnath Singh met farmers leaders

டெல்லி எல்லைக்குள் நுழைய முடியாமல் போராடிவரும் வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (Home Minister Rajnath Singh met farmers leaders)

உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் ‘கிசான் கிராந்தி’ என்ற பெயரில் கடந்த 23 ஆம் திகதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.

இந்த பேரணி இன்றைய தினம் காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப் பிரதேசம் டெல்லி எல்லைப் பகுதியை வந்தடைந்தது.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் பாதையில் அதிரப்படை பொலிஸார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இதனால் விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றதுடன், தடுப்பு வேலிகளை உழவு இயந்திரங்களால் மோதி தடையை மீற முயன்றனர்.

அவர்கள் கலைந்து செல்வதற்காக பொலிஸார் தண்ணீரை அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை முன்னெடுத்தனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.

இதற்கிடையில், இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண்மைத்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய பொலிஸாரின் நடவடிக்கைக்கு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Home Minister Rajnath Singh met farmers leaders