பிரதமர் ரணில் அபிவிருத்திக்கு தடையாக உள்ளார்! கோத்­த­பாய குற்றச்சாட்டு!

0
456

எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடு­வல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றினார். Ranil Interrupt Development Gotabaya Said Sri Lanka Tamil News

அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது,

அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை.

எம்மைப் பழி­வாங்­க ­வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்­டுமே நல்­லட்­சி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்தார்.

மீண்டும் எமது ஆட்­சியில் ஜன­நா­ய­கத்தை மக்கள் உண­ரு­வார்கள். கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பிர­தமர் அபி­வி­ருத்­தி­களை தடுக்­கின்றார். விமான நிலையம், துறை­முகம் அமைத்­தது நாமாக இருந்­தாலும் அவை அனைத்­துமே இந்த நாட்­டிற்­கான வளங்­க­ளாகும்.

ஆனால் நாம் அவற்றைச் செய்த ஒரே கார­ணத்­தினால் எம்மைப் பழி­வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் இந்த அபி­வி­ருத்­தி­களை பிர­தமர் தடுத்து வரு­கின்றார்.

இதனால் தான் எமது நாட்டில் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் உரு­வா­கி­யுள்­ளன. இந்த அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசு­கின்ற போதிலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தத் தெரி­ய­வில்லை. இன்­று­ வரை பேசிக்­கொண்டே உள்­ளனர். ஆனால் நடை­மு­றைக்கு ஒன்றும் வர­வில்லை என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

Tamil News Live

Tamil News Group websites