ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது! – 4.5 லட்சம் பேரிடம் ஆதரவைத் திரட்டும் கையெழுத்து இயக்கம்!

0
438
not-open sterile plant - signature movement support 4.5lakh people

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் 4.5 லட்சம் மக்களிடம் கையொப்பம் பெற முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.not-open sterile plant – signature movement support 4.5lakh people

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் முற்றுகையிடப் பேரணியாகச் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆலைத்தரப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், ஆலையைத் தொடர்ந்து இயக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வசீப்தர் தலைமையிலான ஆய்வுக்குழுவை நியமித்தது. நீதிபதி வசீப்தர் ஆய்வுக்குழுவில் தொடர முடியாது என தெரிவித்ததால், மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவை நியமித்தது.

கடந்த 23-ம் தேதி மாலை, தூத்துக்குடிக்கு வந்த அக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை தாமிரக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டது.

இதில், ஆலைக்கு எதிராகவும், மீண்டும் திறக்கப்பட வேண்டாம் எனவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஆய்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் மூன்றாம் நாள், சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் மண்டல அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தியும், ஆலைக்கு ஆதரவாகவும் 45,000 மக்கள் கையொப்பம் போடப்பட்டுள்ள மனுக்கள் அடங்கிய கோப்பை ஆலைத்தரப்பினர் ஆய்வுக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போல பணம் கொடுக்கப்பட்டு, ஆலைக்கு ஆதரவாக மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டுள்ளது என பலதரப்பினரும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் ஆலைத்தரப்பு ஆதரவு உள்ளதாக அளித்த 45,000 கையொப்பங்களைவிட பத்து மடங்காக 4.5 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டு ஆய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கும், கையெழுத்து இயக்கப் பணிகளை இன்று துவக்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் பேருந்துநிலையம், ரயில்நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கையொப்பம் பெறப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :