ரஃபேல் ஒப்பந்தம் பற்றி உண்மை வெளிவர விசாரணை அவசியம்! – கமல்ஹாசன்!

0
405
investigation necessary find truth Rafael agreement - kamal hassan

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.investigation necessary find truth Rafael agreement – kamal hassan

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த ஒரு குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கூறிவருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், மத்திய அரசு ரபேல் விவகாரத்தில் தனது மவுனத்தை கலைக்க வேண்டும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை பற்றி உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியம். ரபேல் ஒப்பந்தம் பற்றி மத்திய அரசு மீது எந்தவித குற்றச்சாட்டும் கூறவில்லை.

ஆனால் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க, ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் அறிக்கைக்கு சற்று முன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற எம்.பி. தாரிக் அன்வர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக என்சிபி கட்சி தலைவர் சரத் பவாருக்கும், எம்.பி. தாரிக் அன்வருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவு வந்தது என்று கூறப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :