ரூ.3 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்க எச்.ராஜா முயற்சி! – கே.பாலகிருஷ்ணன் புகார்!

0
444
Huge attempt rob Rs.3 thousand crores - K.Balakrishnan's complaint

அறநிலையத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டுப் பெண்களை இழிவாக பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும், இந்து சமய அறநிலையத் துறையை அழித்துவிட்டு திருக்கோயில்களை கைப்பற்றும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரத்தைக் கண்டித்தும், சிலைகள் கடத்தல் என்ற பெயரில் பொய்வழக்கு போட்டு கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் தமிழ்நாடு அறநிலையத் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வியாழனன்று (செப். 27) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.Huge attempt rob Rs.3 thousand crores – K.Balakrishnan’s complaint

போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் நெ.இல.சிறீதரன் தலைமை தாங்கினார். அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் க. தென்னரசு, அதிகாரிகள் சங்கத் தலைவர் கோ.சம்பத் குமார், தணிக்கை பணியாளர் சங்கத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். ஆட்சித் துறை சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.பாரதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் பேசினார். திருகோயில் நிர்வாகிகள் சங்க பொதுச் செயலாளர் க.அருட்செல்வன் நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தை வாழ்த்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்து சமய அறநிலையத்துறை சொத்துக் களை பறிமுதல் செய்து இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் எச். ராஜா கூறுகிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை.

ஆண்டாண்டு காலமாக இந்து அமைப்புகள் பராமரித்து வந்த நிலையில் சொத்துக்களை பாதுக் காக்க முடியவில்லை என்பதனால்தான் 1927ஆம் ஆண்டு நீதி (ஜஸ்டிஸ்) கட்சி ஆட்சி யில் வாரியம் உருவாக்கப் பட்டது. பின்னர் அது அற நிலையத் துறையாக மாற்றம் செய்யப்பட்டது” என்றார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வாரியமாக மாற்றினார். ஆனால், வாரியத்தால் முறையாக பராமரிக்க முடியாததால் மீண்டும் அறநிலையத்துறைக்கு கொண்டு வந்ததும் ஜெயலலிதாதான்.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் கள் ரூ. 3 ஆயிரம் கோடியை வங்கியில் வைப்பு வைத்துள்ளது.

அந்த பணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே மதவெறியர்களின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோயில் நிலங்களில் 3 தலை முறையாக குடியிருந்து வருகிறார்கள், சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

அரசே அதற்குரிய கிரயத் தொகையை வழங்கி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன், பெரிய கருப்பன் (திமுக), மல்லை சத்யா (மதிமுக), வன்னிஅரசு (விசிக), பழ.நெடுமாறன் (தமிழ் தேசிய இயக்கம்), ஆழி.செந்தில்நாதன் (எழுத்தாளர்), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), பி.சுகந்தி (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), பேராசியர் சரஸ்வதி (மனித உரிமை செயல்பாட்டாளர்), சிறவை ஆதினம் குமரகுருபரர், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், மயிலம் பொம்புர ஆதினம் சிவஞ்ஞான பாலயம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :