ஒருவரை காலி செய்துவிட்டோம்… அடுத்து இன்ஜினீயர் பாபுதான்! – பெண் மரணத்தில் அதிர்ச்சி!

0
446
evacuated person next engineer babu - girl shocked death

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இன்ஜினீயர், தன்னுடைய அம்மா லலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறியதையடுத்து லலிதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.evacuated person next engineer babu – girl shocked death

சென்னை பெரம்பூர், ராஜாபாதர் தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் அமெரிக்காவில் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

இவரின் மனைவி நந்தினி. இவரும் அமெரிக்காவில் குடியிருந்தார். பாபுவின் அம்மா லலிதா. 66 வயதான இவர், கடந்த 9.2.2018-ல் இறந்தார். அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் பாபு.

இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி பாபு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் செம்பியத்தில் உள்ள மயானத்தில் லலிதாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் தெரிவித்தார்.

எப்படி இறந்தார் லலிதா என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பாபுவும் நந்தினியும் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர்.

அப்போதுதான் லலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், லலிதாவைக் கவனிப்பதற்காக நந்தினி அமெரிக்கா செல்லவில்லை.

பாபு மட்டும் அங்கிருந்து வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் லலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகப் பாபுவிடம் நந்தினி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற லலிதா இறந்துவிட்டார். இதையடுத்து, பாபுவும் அமெரிக்காவுக்குச் செல்லவில்லை.

இந்தச் சமயத்தில்தான் பாபுவுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பாக அவர், சிகிச்சை பெற்றபோது லலிதாவுக்கு ஏற்பட்ட அதே உடல்நலப் பாதிப்பு பாபுவுக்கும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அவருக்கு உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்துதான் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பாபு கருதி, நீதிமன்ற உதவியை நாடியுள்ளார் என்று தெரியவந்தது.

பாபுவின் சந்தேகத்துக்கு ஆதாரமாக செல்போன் உரையாடல் ஒன்று கிடைத்ததுள்ளது. அதில் ஒருவரைக் காலி செய்துவிட்டோம்.

அடுத்து பாபுதான் என்று பெண் ஒருவர் பேசும் ஆடியோ உள்ளது. அதைக் கேட்டதும் பாபு அதிர்ச்சியடைந்துள்ளார்.

லலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் பிரேத பரிசோதனை மூலம் அவிழும். அதுபோல பாபுவை கொலை செய்ய திட்டமிட்ட பெண்ணையும் எளிதில் அடையாளம் கண்டுவிடலாம் என்கின்றனர் போலீஸார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :