வடக்கு – கிழக்கு அதிகார பகிர்வு நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்! சம்பிக்க ரணவக்க சீற்றம்!

0
501

வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல், தவறானது எனவும் அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Minister Champika Ranawaka Statement Sri Lanka Tamil News

தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும், அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டள்ள, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என, அவர் இதன்போது எச்சரித்தார்.

நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக, மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, “20ஆவது திருத்தம், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு, வெளிப்படையாகவே பாதிப்பானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாட்டை ஸ்திரமற்றதாக ஆக்குவதற்கு, எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது” என, அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூலமாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்குப் பின்னும் பறிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

Tamil News Live

Tamil News Group websites