இந்திய இராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக்கூடாது; மன்மோகன் சிங்

0
433
Forces remain uncontaminated sectarian appeal

இந்திய இராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக்கூடாது என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். (Forces remain uncontaminated sectarian appeal)

தலைநகர் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஏபி.பரதன் நினைவு செற்பொழிவு இடம்பெற்ற போது, இதில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், நமது அரசியல் நடைமுறையில் மதவாதம் எனும் கிருமியைப் பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர் நாடியாக இருப்பது மதச்சார்பின்மையே எனக் குறிப்பிட்ட அவர், இதனை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளதாகவும் இத்தகைய முதன்மையான பணியில் இருந்து நீதித்துறையின் கவனம் திரும்பிவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று, தேர்தல் நடைமுறைகளில் மதம், மத உணர்வுகள், பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி, ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதச்சார்பின்மையை காப்பதில் நீதித்துறைக்கு இணையான பங்கு ஊடகங்களுக்கு உள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் இராணுவம், மதச்சார்பற்ற தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர்,

அதில், பிரிவினைவாத கோஷம் ஏற்பட்டு, அதன் புனித தன்மையை கெடுத்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Forces remain uncontaminated sectarian appeal