“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” – கமல்ஹாசன்!

0
478
deny caste based promotion - kamal hassan india tamil news

திறமைக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்றாலும், சாதி அடிப்படையில் அதனை மறுக்கவும் கூடாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.deny caste based promotion – kamal hassan india tamil news

அரசுப் பணியில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை பின்பற்ற தேவையில்லை என கடந்த 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனை மறுபரிசீலனை செய்ய கோரிய மனு மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான, ‌எதிரான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.

மேலும் அரசுப் பணியில் சேர்க்கையின் போதே எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு அரசுப் பணியில் பதவி உயர்வின் போதும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டியது தேவையில்லை என்ற 2006-ஆம் ஆண்டு தீர்ப்பில் திருத்தம் தேவையில்லை என அறிவித்தனர்.

மாநில அரசுகள் இதில் சுயமாக முடிவெடுக்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் எவ்வளவு பின் தங்கியுள்ளனர் என்பதற்கான தரவுகளை மாநில அரசுகள் சேகரிக்க வேண்டிய தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திறமைக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்றாலும், சாதி அடிப்படையில் அதனை மறுக்கவும் கூடாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசுப்பணியில் பதவி உயர்வின் போது எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ள நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் ஆதார் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், “தனிமனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக் கூடாது.

அரசு மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் போற்றுதலுக்குரியவை. ஜன்னல் வழியே எட்டிப்பார்ப்பதும், கண்காணிப்பதும் சரியல்ல” என்றார் கமல்ஹாசன்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :