கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

0
434
court dismissed petition seeks police custody

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் இன்றைய தினம் நிராகரித்துள்ளது. (court dismissed petition seeks police custody)

முதலமைச்சர் மற்றும் பொலிஸாரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது, 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கடந்த 23 ஆம் திகதி காலை அவரை கைது செய்தனர்.

3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை நீதிமன்ற விளக்கமறியலில் வைக்குமாறு எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு கோரி பொலிஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய பொலிஸாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; court dismissed petition seeks police custody