ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இருந்தபோது யாரும் பிரச்சினை ஆக்கவில்லை

0
415
goa cm manohar parikar issue BJP comments

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது அதையெல்லாம் யாரும் ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை. (goa cm manohar parikar issue BJP comments)

ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நிலையை மட்டும் ஏன் பிரச்சினை ஆக்குகின்றார்கள் என்றும் கோவாவில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் படிப்படியாகக் குறையும் என்றும் மஹாராஷ்ட்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், கோவா மாநில பொதுப் பணித்துறை அமைச்சருமான சுதின் தவாலிகர் தெரிவித்துள்ளார்.

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பரிகார், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பரிகார், அமெரிக்காவுக்கு சென்றும் மூன்று மாதங்கள் வரை சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், உடல்நிலை சரி வராத காரணத்தினால், தற்போது டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும், இல்லையென்றால் இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஆட்சி மாற்றம் அல்லது வேறு முதலமைச்சரை கொண்டு வரவேண்டும் என்று காங்கிரஸ் கூறி வந்தது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கையில், கோவா பிரச்சினை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி முக்கியத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றது.

அதன் இறுதியில், மனோகர் பாரிக்கரே கோவாவின் முதலமைச்சர் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த மாநில அமைச்சரவை மற்றும் துறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு மனோகர் பரிகாரே முதலமைச்சராக செயல்படுவார் என்று தெரிவித்த போதிலும் காங்கிரஸ் உடும்பு பிடியாக பிடித்து பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்துகொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; goa cm manohar parikar issue BJP comments