வைத்தியர்களுக்கு எதிரான சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை!

0
411

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குறிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Doctors Transfer Health Ministry Action Sri Lanka Tamil News

போசாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரச் செயலாளர் பீ.ஜீ.எஸ். குணதிலகவிற்கு இந்த விடயத்தினை அறுவுறித்தியுள்ளார்.

அவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அவர்களுடைய பழைய பணி இடத்திலிருந்து விடுவிக்காத வைத்தியசாலை பணிப்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் வைத்தியாசலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகளை இடைநிறுத்தவும், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போதும் நிர்வாக திறமைகளுக்கு புள்ளி வழங்கும் போதும் இதுதொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் நரஹேன்பிட்டி தேசிய இரத்த பரிமாற்ற மையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

Tamil News Live

Tamil News Group websites