சிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா?

0
291
neymar gives jersey crying boy PSG beats rennes

பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர்களில் முக்கிய இடம் வகிப்பவர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு PSG ரேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. 90 நிமிடத்தில் PSG 3-1 முன்னிலைப் பெற்றிருந்தது. neymar gives jersey crying boy PSG beats rennes,tamil football news,tamil sports updates,Tamil News 

அதன்பின் இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. அப்போது நெய்மருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். இதனால் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி நெய்மரை நோக்கி அழுதுகொண்டே ஒடிவந்தான்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனை பிடித்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இதை கவனித்த நெய்மர், அந்த சிறுவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி தன்னுடன் அணைத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அந்த சிறுவன் நெய்மரின் ஜெர்சியை பிடித்து ஜெர்சி வேண்டும் என சைகை காட்டினார். உடனே நெய்மர் ஜெர்சியை கழற்றி கொடுத்து அந்த சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தினார்.

neymar gives jersey crying boy PSG beats rennes

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news