இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்

0
517
Rafale deal Modi Betrayed India Says Rahul Gandhi

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் வெளியிட்டுள்ளார். (Rafale deal Modi Betrayed India Says Rahul Gandhi)

இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றது.

இந்தவிவகாரம் தொடர்பில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படியே அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயற்பட்ட இரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

ஹெலாண்டேவிற்கு நன்றி, பிரதமர் தனிப்பட்ட முறையில் ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இதன்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது.

பிரதமர், இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துள்ளார் என்றும் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rafale deal Modi Betrayed India Says Rahul Gandhi