பத்து வருடங்கள் மஹிந்த மலையக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை! அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல குற்றச்சாட்டு!

0
440

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்து வருடங்கள் ஆட்சி புரிந்தார். எனினும் மலையக மக்களுக்கு காணி உரித்துரிமையை கூட வழங்கவில்லை. பத்து வருடங்கள் ஆட்சி செய்தும் மலையக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. எனினும் நல்லாட்சியில் 7 பேர்ச்சஸ் காணித் துண்டை மலையக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவையில் நானே முன்வைத்தேன். இதன்படி தற்போது காணி பத்திரத்தை உரித்துரிமையுடனே வழங்கி வருகின்றோம். ” என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். Minister Lakshman Kiriella Mahinda Statement Sri Lanka Tamil News 

பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலம், இலங்கை ஆளணி முகாமை நிறுவக திரு்தத சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தோட்ட மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி வழங்க யோசனை முன்வைத்தது நானேயாகும். தற்போது நாம் அனைத்து தோட்ட மக்களுக்கு காணி பத்திரத்துடன் உரித்துரிமையையும் வழங்கி வருகின்றோம்.

இதற்கும் முன்னர் எந்த தோட்ட மக்களுக்கும் காணி பத்திரத்திற்கு உரித்துரிமை கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்து வருடங்கள் ஆட்சி புரிந்தார்.எனினும் காணி உரித்துரிமையை கூட வழங்கவில்லை.

சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியை இணைத்தால் 20 வருடங்கள் சுதந்திரக் கட்சி ஆட்சி செய்துள்ளது. எனினும் ஒன்றும் நடக்கவில்லை. நாம் செய்து வருகின்றோம். ஆகவே மலையக மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு எதிர்ககட்சிகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites