மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய கொலை சதித் திட்டத்துக்கு, அரசியல் நோக்கமே காரணம் – வாசுதேவ

0
390
TAMIL NEWS political purpose Maithripala Gotabhaya murder conspiracy

(TAMIL NEWS political purpose Maithripala Gotabhaya murder conspiracy)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை சதித்திட்டத்துக்கு அரசியல் பின்புலமே காரணம் என்றும், முறையான விசாரணை மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகமும் நிலவுதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதிக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் எவ்வாறான தொடர்புகள் இருக்கின்றன என்பது யாரும் அறிந்த விடயம்.

அத்துடன், ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை தீர்ப்பதற்கு சிலவேளை, ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனைகளை தெரிவிப்பவராகவும் இருக்கலாம்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவே தெரிவாவார் என்று இந்தியா நம்புகின்றது.அதேபோன்று, சர்வதேச பொருளாதார சஞ்சிகை ஒன்றும் இதனை எதிர்வு கூறியுள்ளது.

அதனால்தான் இந்தியா மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து அவருக்கு அரச தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை வழங்கியிருந்தது.

அத்துடன் பல சர்வதேச நாடுகள் மஹிந்த ராஜபக்ஸவை உத்தியோகபூர்வமற்ற அரச தலைவராக இப்போதே ஏற்றுக்கொண்டுள்ளன.

அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலைசெய்யும் சூழ்ச்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சதித்திட்டத்துக்கு அரசியல் பின்னணியே காரணமாகும். முறையான விசாரணை இடம்பெற்றால் அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கலாம் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

(TAMIL NEWS political purpose Maithripala Gotabhaya murder conspiracy)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites