ஐஸ்வர்யாவிற்கு எளிமிநேசனே கிடையாது : அப்போ டைட்டில் இவருக்கு தான் போல

0
590
Tamil Big Boss news update Aishwarya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தாய் பாசத்தின் ஓர் அம்சமாக விளங்கிய மும்தாஸ் நேற்று ஐஸ்வர்யாவை விட குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றபட்டார் .(Tamil Big Boss news update Aishwarya )

இருந்தும் , மும்தாஜிற்கு பதில் ஐஸ்வர்யா தானே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே சரிவர டாஸ்க்குகள் எதையும் செய்யாமல், சர்வாதிகார டாஸ்கில் கில்லி மாதிரி சொல்லியடித்து மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். பல்வேறு கட்டங்களில் பிக் பாஸ் மற்றும் தனது தோழி யாஷிகாவினால் காப்பாற்றப்பட்டு வந்த ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களாக போட்டியாளர்களின் தீர்க்கமான முடிவினால் நாமினேட் ஆகி வருகிறார்.

அவரது ஒவ்வொரு நாமினேஷனிலும் ஐஸ்வர்யா வெளியேறிவிடுவார் என்று ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு பிக் பாஸ் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார். முதல் வாரம் அப்பாவியான சென்ராயன் வெளியேற்றப்பட்டார். தற்போது வக்குகளின் அடிப்படையில் மும்தாஜ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆகவே தொடர்ந்து பிக் பாஸின் கருணையால் பிக் பாஸ் வீட்டில் நீடித்து வரும் ஐஸ்வர்யா இந்த வாரமாவது வெளியேற்றப்படுவாரா என்று மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிக் பாஸ் இப்படி ஐஸ்வர்யாவுக்கு பாரபட்சம் காட்டி வருவது போட்டியில் மீதுள்ள அதிருப்தியை அதிகப்படுத்துவதாக உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் தனது ஆட்டத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு ஐஸ்வர்யாவை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் சிலர் முன்வைத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்