ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை!

0
314
Geneva Convention request refund resolution against Sri Lanka

இலங்கைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 30/01 என்ற தீர்மானத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. Geneva Convention request refund resolution against Sri Lanka

இத்தாலியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இலங்கை தேசாபிமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குறித்த யோசனை, இலங்கையின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்டது.

அந்த யோசனையானது, இலங்கைக்கும், இராணுவத்திற்கும் எதிரானது. எனவே, இந்த யோசனையை முழுமையாக மீளப்பெற வேண்டும்.

அத்துடன், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஜெனிவாவில் பதிலளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பில் இம்முறை நேரடியான விவாதங்கள் நடைபெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இலங்கை விவகாரம் தொடர்பில் சில உப குழுக்களின் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இம்முறை ஜெனிவா மாநாட்டிற்கு செல்வதற்காக விண்ணப்பித்திருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையானது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல புலம்பெயர் அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

tags ;- Geneva Convention request refund resolution against Sri Lanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites