தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்

0
699
Tamil political prisoners hunger strike

தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (Tamil political prisoners hunger strike)

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகிய மூவருமே இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், இன்றுவரை தம்மை எவரும் வந்து பார்க்கவில்லை என்றும் தமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு செல்வதாகவும் அவர்கள் மகசின், அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்கு செல்கிறார்கள் என்றும் செல்லும் வழியில் கூட தம்மை பார்க்கவில்லை என்றும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் சிறைச்சாலை நிர்வாகமும் தம்மை கண்டுகொள்வதாக இல்லை என்றும் 25 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கு தம்மைப் பற்றி கதைப்பதற்கு எமது பிரதிநிதிகள் தயாராக இல்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகிய மூவரும் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Tamil political prisoners hunger strike