தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ

0
525
present government revengeing military

{ present government revengeing military }
தற்போதைய அரசாங்கம் தமது அரசியல் எதிர்த்தரப்பினரை பழிவாங்குவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிரந்தர நீதாய மேல்மன்றில் முன்னிலையான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

டி.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது 33 மில்லியன் ரூபா அரசாங்க பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த நிரந்தர நீதாய மேல்மன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்தை இல்லாதொழிக்க உதவியளித்த இராணுவத்தினர் உள்ளிட்டோரை தண்டிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Tags: present government revengeing military

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites