மாணவி கிருசாந்தியின் 22 ஆவது நினைவு தினம் இன்று யாழில்

0
741
Krishanthi Kumaraswamy family members killed Chemmani

யாழ். செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் 22 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. (Krishanthi Kumaraswamy family members killed Chemmani)

செம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டிலும் அதன் தலைவர் ஞா. கிஸோர் ஏற்பாட்டிலும், வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், கே.சயந்தன், ஆர்.ஜெய்சேகரம், உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த கிருஷாந்தி குமாரசாமி 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் வேளையில் இராணுவத்தினரால் செம்மணி காவலரணில் தடுத்து நிறுத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஆதாரங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காக கிருஷாந்தியைத் தேடிச் சென்ற கிருஷாந்தியின் தாயார் குமாரசாமி இராசம்மாள், சகோதரரான குமாரசாமி பிரணவன், குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த நால்வரும் காணாமற் போய் 45 நாட்கள் கடந்த நிலையில் செம்மணியிலுள்ள புதைகுழியொன்றில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Krishanthi Kumaraswamy family members killed Chemmani