Categories: CINEMAKollywood

கீர்த்தியால் பிரிந்ததா சாவித்திரி குடும்பம்?

நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இப்படம் ஜெமினிகணசேனை தவறாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக கமலா செல்வராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.Keerthi Suresh Mahanati separates Savithri Family

இந்த வாழ்க்கைப் படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இந்த படத்தால் தங்கள் குடும்பம் பிரிந்துள்ளதாக கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.

படத்தை பார்வையிட்ட சாவித்திரி மகன் சதீஷ், “அம்மாவின் கடைசி நாள்களில் எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே படத்தில் காட்டியிருந்தார்கள்” என்று கூறினார்.

மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், “எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்தார்கள் என எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு” என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

ஆனால் ஜெமினியின் மகள்களில் ஒருவரான கமலா செல்வராஜ், “என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்ததுபோலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்தது விட்டோம்.

என்னையும், என் அப்பாவையும் கூர்க்காவையும் நாயையும் கொண்டு விரட்டியடித்தவர் தான் இந்த சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்” என்று  ஆக்ரோஷமடைந்தாராம்.

இதுபற்றி விஜய சாமுண்டீஸ்வரியிடம் கேட்டபோது “பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னும் சரியாகலை. கமலா அக்கா இன்னும் என்னைவிட்டு தூரமாகத்தான் இருக்காங்க. எங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. ஆனா அவங்க பிள்ளைகள் என்கிட்டப் பேசிட்டிருக்காங்க. அக்கா கோபம் தணியறதுக்குக் கொஞ்ச காலம் ஆகலாம்.” என்றாராம்.

Tag :Keerthi Suresh Mahanati separates Savithri Family

எமது ஏனைய தளங்கள்

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: Keerthi SureshKeerthi Suresh MahanatiKeerthi Suresh Mahanati separates SavithriKeerthi Suresh Mahanati separates Savithri FamilyLatest Tamil Cinema newsMahanatiTamil Cinema NewsTamil News

Recent Posts

எந்த படமானாலும் நான் நடிப்பேன் என கூறும் தாராளமான சாந்த நடிகை!

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் நடிகை சாந்தினியாம். இவர் சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லையாம், கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். அத்துடன் இவர் கதை கேட்காமல், எந்த…

3 hours ago

பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் படிப்படியாக வெளியில் அனுப்பப்பட்டு தற்போது 6 பேர் வரை இறுதி கட்டத்தில்…

3 hours ago

மரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு…

11 hours ago

அமளிதுமளியில் முடிவடைந்த கல்முனை மாநகர சபை அமர்வு!

கல்முனை மாநகர சபையின் அமர்வு பெரும் வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றதுடன் உறுப்பினர்களின் களேபரத்தால் இடைநடுவில் சபை அமர்வை மேயர் முடிவுறுத்தினார். Kalmunai Municipal Council Assembly Today Tamil News…

11 hours ago

பிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள மசூதிக்கு வெளியே மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே காரை மோதச் செய்து தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Attacking Muslims near mosque Britain எட்குவயார்…

12 hours ago

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று…

12 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.