இளம் வயதில் கலாநிதிப் பட்டம்பெற்ற இலங்கை இளைஞர் பிரித்தானியாவில் துணைப் பேராசிரியரானார்!

0
390
TAMIL NEWS srilankan 25 years ahamed Neuroscience University London

(TAMIL NEWS srilankan 25 years ahamed Neuroscience University London)

ஐக்கிய இராச்சியத்தின் குயின்மேரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஹமட் மிப்லாஹ் ஹுசைன் இஸ்மாயில் நொடிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நொடிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் நரம்பியல் துறையில் முதல் தரத்தில் கௌரவப் பட்டம் பெற்ற இவர், தமது ஆராய்ச்சியை தொடர்வதற்காக, புலமைப்பரிசில் பெற்று லண்டன் குயின்மேர் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

தனது 25 ஆவது வயதில் கலாநிதிப் பட்டத்தை பூர்த்தி செய்த அவர், அறிவுசார் நரம்பியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் இலங்கையராக தகுதி பெற்றார்.

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான அஹமட், பேருவலையை சேர்ந்த ஹுஸைன் இஸ்மாயில் தம்பதிகளின் புதல்வராவார்.

(TAMIL NEWS srilankan 25 years ahamed Neuroscience University London)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites