Categories: NEWS

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம்

போதைப்பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். (Special court punish drug dealers)

நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றைப் போன்று போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்துதல், மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை தடைசெய்தல் சம்பந்தமாகவும் சட்டவிரோத மணல் வியாபாரம் உள்ளிட்ட சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாகவும், யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் கூட்டம் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் மாணவர்கள் பணத்திற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் அதற்காக 9 ஆம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.

பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இந்த போதை பழகத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக தெல்லிப்பளை, அளவெட்டி, மாதகல், வட்டுக்கோட்டைப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கள் முடிவடையும் போது மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் குழு பெண் மாணவிகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் பஸ் தரிப்பிடங்களிலும் இவர்கள் தொந்தரவு கொடுப்பதகாவும் தெரிவிக்கப்பட்டது.

தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தினை முடித்து செல்வதனால் பிள்ளைகள் தனிமை ஆகின்றனர். அவர்களினல் பலர் இந்த போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது இனங்காணப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு சமூக மட்டத்திலும் கிராம மட்டத்திலும் பெற்றோர்களினதும் சமூக நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் சமூக அக்கறை கொண்டோர் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பதன் ஊடாக பிள்ளைகள் தவறான பாதையில் பயணிப்பதனை இலகுவில் அடையாளங்கண்டு கொள்ள முடியும். அவர்களை நல்வளிப்படுத்த முடியும் இதற்காக அனைவரினம் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என குறிப்பிட்டார்.

தகவல் கிடைக்கின்ற போதும் விரைந்து செயற்படுவதில் பொலிஸாருக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளதாக தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர,
விரைந்து செல்வதற்கு உரிய போதிய வாகனவசதிகள் இல்லாது இருப்பதாக தெரிவித்தார்.

இருந்த போதும் இயலுமானவரையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடியும் போது போக்குவரத்து பொலிஸார் பாடசாலைக்கு அருகாமையில் கடமை புரிகின்றனர்.

யாழ். ஐந்து சந்தி, மன்னார் பேசாலை, அராலி போன்ற பல பகுதிகளில் கேரள கஞ்சா கரோயின்போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கொடிகாமம், மண்கும்பான், போன்ற பகுதிகளில் களவாக மண் அகழ்வு செய்யப்படுகின்றது.
ஆயினும் அதனை கொண்டு செல்பவர்கள் அனைத்து சந்திகளிலும் தமது தரப்பினரை தகவல் வழங்குவதற்காக நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்கின்றனர்.

பொலிஸார் செல்லும் போது அவர்கள் அதிலிருந்து அகன்று சென்றுவிடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Special court punish drug dealers

Thushi T

Share
Published by
Thushi T
Tags: drug dealersNorthern Province GovernorpunishReginald CoreySpecial courtsrilanka tamil newsTamil News OnlineToday News in Tamil

Recent Posts

சீனாவில் ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகள்

சீனாவில், ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகளை ஏராளமானோர் வியந்து இரசித்தனர். largest waves river China சீனா நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான குவான்டியாங் ஆறு (Qiantang), ஹைனிங்…

5 mins ago

பாஜக சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம்; வீதிகளில் பொலிஸ் பாதுகாப்பு

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டக்காரர்கள் பேரூந்துகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (West Bengal…

18 mins ago

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நியமனம்!

{ Marudapandy Rameswaran appointed Chief Minister } மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில்…

59 mins ago

லண்டனில் $50 millionற்கு மேல் ஏலம் போகும் இளஞ்சிவப்பு வண்ண வைரம்

லண்டனில் உள்ள இளஞ்சிவப்பு வண்ண வைரம் இந்திய ரூபாயின் மதிப்பில் 363 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. pink color diamond goes London…

1 hour ago

“பிக் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை “ரீ என்ட்ரி கொடுக்கும் யாஷிகா

பிக் பாஸ் நேற்றோடு 100 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் .இந்நிலையில் எலிமினட் ஆன சில போட்டியாளர்களும் திரும்பவும் ரீ…

1 hour ago

உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..!

பீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.