ஆனைக்­கோட்டை அம்­மன் திரு­வி­ழா: 3 பத்­தி­ரி­கை­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும் வாக்­கு­மூ­லம்

0
465
Annaikottai Kannagai Amman Temple Issue

ஆனைக்­கோட்டை கண்­ணகை அம்­மன் ஆலயத் திரு­வி­ழா­வில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் கோரிக்­கை­யான தனி ஈழத்தை எடுத்­துக் காட்­டும் வகை­யில் சுவா­மிக்கு அலங்­கா­ரம் செய்­தமை தொடர்­பான செய்­தியை வெளி­யிட்ட யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வெளி­ வ­ரும் 3 பத்­தி­ரி­கை­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும் வாக்­கு­மூ­லம் பெற்­றுக்­கொள்ள பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் நேற்று அனு­மதி கோரி­னர். Annaikottai Kannagai Amman Temple Issue

பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­ன­ரின் விண்­ணப்­பம் சிங்­கள மொழி­யில் முன்­வைக்­கப்­பட்­டது. அதனை ஏற்க மறுத்த பதில் நீதி­வான் கன­க­ரட்­ணம் கேச­வன், யாழ்ப்­பாண நீதி­மன்ற மொழி­யான தமி­ழில் முன்­வைக்­கு ­மாறு உத்­த­ர­விட்டு வழக்கை நவம்­பர் 16ஆம் திக­தி­வரை ஒத்­தி­வைத்­தார்.

ஆனைக்­கோட்டை கண்­ணகை அம்­மன் ஆல­யத்­தில் கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற திரு­வி­ழா­வில் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களை ஒன்­றி­ணைத்து தமி­ழீழ வரை­ப­டத்தை ஒத்த அலங்­கா­ரத்­தில் அம்­மன் வீதி­யுலா வந்­தார்.

இந்த சம்­ப­வம் தொடர்­பில் பயங்­க­ர­வா­த­வி­சா­ர­ணைப் பிரி­வி­ன­ரால் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அது­தொ­டர்­பில் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர், யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் வழக்கு ஒன்றை இன்று தாக்­கல் செய்­த­னர்.

வழக்கு பதில் நீதி­வான் கன­க­ரட்­ணம் கேச­வன் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.எழுத்­து­மூல விண்­ணப்­பத்தை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் மன்­றில் முன்­வை த்­த­னர்.

“தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் முன்­வை க்­கப்­பட்ட தனி ஈழக் கோரிக்­கை­யைக் குறிக்­கும் வகை­யில் ஈழ வரை­ப­டத்தை ஒத்த வகை­யில் ஆனைக்­கோட்டை கண்­ணகை அம்­மன் ஆல­யத்­தில் சுவாமி அலங்­க­ரிப்­பட்­டி­ருந்­தார். இது தொடர்­பில் விசா­ர­ணை­கள் முன்­னெ­டு க்­கப்­பட்­டன. ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வர், இந்து இளை­ஞர் மன்ற உறுப்­பி­னர்­கள், ஆலய நிர்­வாக சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் ஆலய பூச­கர் ஆகி­யோ­ரும் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது.

இந்த நிகழ்வு தொடர்­பில் செய்தி வெளி­யிட்ட யாழ்ப்­பா­ணத்­தில் வெளி­வ­ரும் உத­யன், வலம்­புரி மற்­றும் தினக்­கு­ரல் ஆகி­ய­வற்­றின் ஆசி­ரி­யர்­க­ளி­டம் வாக்­கு­மூ­லம் பெறப்­ப­ட­வேண்­டும். அதற்­கான அனு­ம­தியை மன்று வழங்க வேண்­டும்” என்று பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் விண்­ணப்­பம் செய்­த­னர்.

அவர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட எழுத்­து­மூல விண்­ணப்­பம் சிங்­கள மொழி­யில் அமைந்­துள்­ள­தால், அதனை ஏற்­க­ம­றுத்த பதில் நீதி­வான், தமிழ் மொழி­யில் விண்­ணப்­பம் செய்­யு­மாறு அறி­வு­றுத்­தி­னார். அத்­து­டன், வழக்கு வரும் நவம்­பர் 16ஆம் திக­தி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது