வடக்கில் 25 ஆயிரம் கல்வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்

0
414
25 thousand stone homes north

வடக்கில் 25 ஆயிரம் கல்வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவிருப்பதாக வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார். (25 thousand stone homes north)

இதற்கான நடவடிக்கைகள் 3 வாரங்களில் ஆரம்பமாகும் எனக் குறிப்பிட்ட அவர், நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 50,000 வீடுகளில் 25,000 வீடுகள் தொடர்பான கேள்வி கோரல்கள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார், மடு தேவாலய பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய கலைமகள் மகாவித்தியாலயத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன் பிரகாரம் குறித்த பாடசாலை பாதுகாப்பு கட்டளைத் தளபதியினால் எதிர்வரும் 6 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 25 thousand stone homes north