ஹட்டனில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்ட ஒருவர் உயிரிழப்பு

0
415
TAMIL NEWS One died accident NuwaraEliya Main road one injured

(TAMIL NEWS One died accident NuwaraEliya Main road one injured)

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் இருந்து பத்தனை மவுன்டவோ்னன் தோட்ட பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதி உயிர் உயிரிழந்தார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே அவர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதான கொட்டகலை பாத்திபுர பகுதியை சேர்ந்த சுனில் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அதிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(TAMIL NEWS One died accident NuwaraEliya Main road one injured)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites