எண்ணெய் வளம் தொடர்பில் வடக்கு, கிழக்கு கடலில் ஆய்வுகள் ஆரம்பம்!

0
341
Petroleum Search Works Begin Lanka North East Sea Areas

வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியிலுள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். Petroleum Search Works Begin Lanka North East Sea Areas Tamil News

உலகளவில் பிரபலமான Schulumberger என்ற நிறுவனமே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(02) நடைபெற்றது.

இந்த ஆய்வுக்காகப் பனாமா நாட்டுக் கொடியுடன் BGP-Pioneer என்ற கப்பல் கொழும்பு வந்துள்ளது.

இந்தக் கப்பல் வடக்கு, கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் 45 நாட்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு தரவுகளை சேகரிக்கும்.

10 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் இந்தக் கப்பல் தரவுகளைச் சேகரித்து, அதனை மலேசியாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கும்.

அங்கு பகுப்பாய்வு செய்யப்படும் தரவுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.

கிழக்குப் பகுதியிலுள்ள ஜேஎஸ்-5, ஜேஎஸ்- 6 துண்டங்களில் முதலில் மேற்கொள்ளப்படும் இந்த எண்ணெய்வள ஆய்வு பின்னர், காவேரி மற்றும் மன்னார் படுக்கைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை