கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை

0
695
Mullaitivu Vadduvakal Naval Camp

கடற்படை முகாமிற்குள் உள்ள, தமக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தரும் கால்நடைகளை பிடித்துத் தருமாறு முல்லைத்தீவு வட்டுவாகல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (Mullaitivu Vadduvakal Naval Camp)

வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமினுள் அடைபட்டுள்ள கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு வழங்க கடற்படையினர் பிரதேச செயலகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், அதனை நிறைவேற்ற பிரதேச செயலகம் தவறிவிட்டதாக கால்நடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த கடற்படைத் தளம் அமைந்துள்ள 617 ஏக்கர் காணிக்குள் சுமார் நூறு மாடுகள் அகப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்டுத் தருமாறு கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டச் செயலகம் ஊடாக கால் நடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முகாம் பகுதிக்குள் அகப்பட்டுள்ள கால்நடைகளை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து கால்நடைகளை பிடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதும் சுமார் 10 மாடுகள் கூட பிடிக்கப்படாத நிலையில், குறித்த முயற்சி கைவிடப்பட்டன.

இதுகுறித்து கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் தெரிவிக்கையில், கடற்படை முகாமுக்குள் அகப்பட்டுள்ள கால்நடைகளை பிடிப்பதற்கு முகாம் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அதற்கான அனுமதி பெறப்பட்டது.

அதன் பயனாக முன்னாள் பிரதேச செயலர் மாடுகளை பிடிக்கக்கூடியவர்களை அழைத்து சென்று முதலில் தடம் வைத்து பிடிக்க முயன்றனர்.

அப்போது ஒரு மாடு மாத்திரமே அகப்பட்டது. அதன் பின்னர் நேரடியாகவே துரத்திப் பிடித்தனர் அதன்போதும் 7 மாடுகள் மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்த நிலையில் மாடுகளை பிடிப்பவர்கள் தமது பிடி கூலிக்கு இந்த மாடுகளை பிடிப்பது பொருந்தாது என கைவிட்டுச் சென்றனர்.

இதன் காரணத்தினாலேயே குறித்த பணி தடைப்பட்டது. இருப்பினும் மீண்டும் கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றினை பிடிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mullaitivu Vadduvakal Naval Camp