ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்

0
428

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (Kurunegala Magistrate court remand Johnston Fernando)

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர், நிதி மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Kurunegala Magistrate court remand Johnston Fernando