யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

0
664
Army agreed release 04 public land jaffna

பலாலி மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். (Army agreed release 04 public land jaffna)

யாழ். குடாநாட்டில் இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு கோரிக்கை விடப்பட்ட இடங்களில் 4 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், வசாவிளான் மற்றும் குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவுச் சங்க கிளைக் கட்டிடத்துடன் ஓர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடமும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவித்தல் யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கட்டடங்கள் தம்மிடம் கையளிக்கப்பட்டதும் உடனடியாகவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Army agreed release 04 public land jaffna